மருத்துவ படிப்புகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

 

மாலைமலர்

திங்கட்கிழமை, மே 13, 3:20 PM IST

புதுடெல்லி, மே 13-

மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த உயர் படிப்புகளுக்கு தேசிய அளவிலான ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

இதனை எதிர்த்து தமிழகம், ஆந்திரா பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. அந்த மனுவில், தேசிய தகுதியுடன் கூடிய பொது நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மருத்துவக்கல்வி பொது நுழைவுத் தேர்வுக்கு இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டது. இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எழுத தேவையில்லை. பழைய முறைப்படியே மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்றும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்திய நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து மருத்துவக் கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரே பொது நுழைவுத்தேர்வு முறை ஏற்கப்படுமா என்பது ஜூலை மாதம் தெரியவரும்.

tamil matrimony_INNER_468x60.gif

 

This entry was posted in News. Bookmark the permalink.

Leave a Reply